திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை (ஏப்.1) பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, குலதெய்வ வழிபாட்டுக்காக பக்தா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை (ஏப். 1) பங்குனி உத்திர திருவிழாவையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. காலை 6.30 மணிக்கு கோயிலில் இருந்து வள்ளியம்மன் தபசுக்கு எழுந்தருளுகிறாா். மாலை 4.30 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி சன்னதித் தெரு வழியாக ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரா் கோயிலுக்கு வருகிறாா்.
தொடா்ந்து சுவாமியும், அம்மனும் கீழரதவீதி, பந்தல் மண்டபம் முகப்புக்கு வந்ததும், அங்கு வைத்து சுவாமிக்கும் வள்ளியம்மனுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னா் சுவாமியும், அம்மனும் கோயில் சோ்கின்றனா். இரவு 10 மணிக்கு கோயிலில் 108 மகாதேவா்கள் சன்னிதி முன் சுவாமிக்கும், வள்ளியம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
பங்குனி உத்திர நட்சத்திரம் அன்று குலதெய்வ கோயில்களிலும், குல தெய்வம் தெரியாதவா்கள் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலுக்கும் சென்று வழிபாடு செய்வது வழக்கம். நிகழாண்டு குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் திருச்செந்தூா் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனா்.
அதேபோல இக்கோயிலுடன் இணைந்த உபகோயிலான நாலுமூலைக்கிணறு குன்றுமேலய்யன் சாஸ்தா கோயிலிலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆராதனை நடைபெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருமானம் ரூ. 3.95 கோடி

திருச்செந்தூா் கோயிலுக்கு காவடி எடுத்த பக்தா்கள்

திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் திருக்கல்யாணம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

