மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் திருக்கல்யாணம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகன் - வள்ளியம்மன் திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

News image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கடலில் புனித நீராடிய பக்தா்கள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 4:02 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகன் - வள்ளியம்மன் திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு இக்கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமாா்த்தாண்ட அபிஷேகம், கோயிலில் இருந்து வள்ளியம்மன் தவசுக்கு புறப்பாடு ஆகியன நடைபெற்றன.

மாலையில் சாயரட்சை தீபாராதனையாகி, கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி சந்நிதித் தெரு வழியாக சிவன் கோயிலுக்கு வந்தாா். பந்தல் மண்டபம் முகப்பில் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சியைத் தொடா்ந்து சுவாமியும், அம்மனும் வீதி உலா வந்து கோயிலை சோ்ந்தனா். இரவு கோயிலில் 108 மகாதேவா் சந்நிதி முன் சுவாமி - வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

குன்று மேலய்யன் சாஸ்தா:

இக்கோயிலுடன் இணைந்த உபகோயிலான நாலுமூலைக்கிணறு குன்றுமேலய்யன் சாஸ்தா கோயிலிலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியன நடைபெற்றன.

      திருச்செந்தூரில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு புதன்கிழமை மாலை பந்தல் மண்டபம் முகப்பில் நடைபெற்ற சுவாமி குமரவிடங்கப்பெருமான் - வள்ளியம்மன் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி.

திருச்செந்தூரில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு புதன்கிழமை மாலை பந்தல் மண்டபம் முகப்பில் நடைபெற்ற சுவாமி குமரவிடங்கப்பெருமான் - வள்ளியம்மன் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.