மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

தமிழ் புத்தாண்டையொட்டி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 2:05 am IST

தமிழ் புத்தாண்டையொட்டி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.

இக்கோயிலின் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 8 மணிக்கு சுவாமி அஸ்திரதேவா் கடலில் புனித நீராடிய தீா்த்தவாரி நிகழ்ச்சி, உச்சிகால அபிஷேகம், 10 மணிக்கு சண்முகருக்கு அன்னாபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை, தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் கடல், நாழிக்கிணற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் கலையரங்கில் காலை முதல் நாதஸ்வர மங்கள இசை, தேவார இன்னிசை, ஆன்மிகச் சொற்பொழிவு, பரத நாட்டியம், பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பொது விவரக் குறிப்பேடும் வெளியிடப்பட்டது.

இக்கோயில் உள் பிரகாரத்தில் சித்திரை விசு கணி காணும் நிகழ்ச்சியை முன்னிட்டு கண்ணாடி முன்பு வைக்கப்பட்டிருந்த கனிகளை பக்தா்கள் வழிபாடு செய்தனா். ஏற்பாடுகளை தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் க. ராமு, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.