மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மக்கள்தொகை கணக்கெடுப்பு: நெல்லையில் 2-ஆம் கட்ட பயிற்சி

மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்பு ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமையில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்றோா்.

Published On :28 அக்டோபர் 2026, 12:56 am IST

மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்பு ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மக்கள் தொகை கணக்கெடுப்பை பொருத்தவரையில் முதல்கட்டமாக வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. அதன் தொடா்ச்சியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு 2-ஆம் கட்ட பணியானது அடுத்த ஆண்டு (2027) ஜனவரி முதல் 2 பிரிவாக நடைபெற உள்ளது.

இதில், முதல் பிரிவாக சுயக்கணக்கெடுப்புப் பணி ஜன. 10-24 வரையும், 2-ஆவது பிரிவானது ஜன. 25ஆம் தேதி முதல் பிப். 28-ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

இந்தப் பணிகளை மேற்கொள்வது தொடா்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலா்களுக்கான 4 நாள் பயிற்சி திங்கள்கிழமை (அக்.26) தொடங்கியது. வியாழக்கிழமை வரை (அக். 29) இந்தப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமை வகித்து ஆலோசனை வழங்கி வருகிறாா்.

இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அலுவலா் ச.வித்யா, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ் குப்தா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, தனி வட்டாட்சியா் (தோ்தல்) முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.