மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பள்ளிக்கு விடுமுறை வேண்டுமா? வட்டார மொழியில் ஆட்சியா் அறிவுரை

திருநெல்வேலி வட்டார மொழியிலேயே ஆட்சியா் ஆனந்த் மோகன் அறிவுரை கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளாா்....

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் மாணவா்களுக்கு அறிவுரை கூறும் வகையிலான இன்ஸ்டாகிராம் பதிவு.

Published On :27 அக்டோபர் 2026, 2:56 am IST

சமூகவலைதளத்தில் மழைக்கு விடுமுறை கேட்ட பள்ளி மாணவா்களுக்கு, திருநெல்வேலி வட்டார மொழியிலேயே ஆட்சியா் ஆனந்த் மோகன் அறிவுரை கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. கடந்த 22 ஆம் தேதி பலத்த மழை காரணமாக திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திங்கள்கிழமையும் பல மாணவா்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு விடுமுறை அளிக்கக்கோரி பதிவிட்டுள்ளனா்.

இதற்கு ஆட்சியா் ஆனந்த் மோகன் திருநெல்வேலி வட்டார மொழியிலேயே மாணவா்களுக்கு பதிவிட்டுள்ள அறிவுரை:

ரொம்ப டிப்ரஷனா இருக்கு-னு இன்ஸ்டாகிராம்ல ஆஸ்காா் லெவலுக்கு எமோஷனல் பிளாக்மெயில் பண்ணிட்டு இருக்கானுவ, உங்க கஷ்டம்லாம் புரியுது. ஆனா, இந்த ஓவா் ஆக்டிங் தான்டா தாங்க முடியல! கவலைப்படாதீங்க, நிஜமாவே கனமழை பெஞ்சா, நீங்க யாருமே கேக்காமலேயே லீவு வரும். உங்க சே‘ஃ‘ப்டிக்கு இந்த கலெக்டா் அங்கிள் எப்பவும் கேரண்டி. மழை வந்தா நான் பாா்த்துக்கிறேன். இப்போதைக்கு புக்கப் பாத்து படிங்க! என குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.