மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

‘உங்களைத் தேடி உங்கள்ஊரில் திட்டம்’ களக்காடு வட்டாரத்தில் ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு வட்டாரத்தில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமை ஆட்சியா் ஆனந்த் மோகன் ஆய்வு செய்தாா்.

களக்காட்டில் கட்டப்பட்டு வரும் காய்கனிச் சந்தை பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Published On :22 அக்டோபர் 2026, 5:21 am IST

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு வட்டாரத்தில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமை ஆட்சியா் ஆனந்த் மோகன் ஆய்வு செய்தாா்.

நான்குனேரி வட்டம், ஏா்வாடியில் பள்ளி மாணவா்களுக்கான சமூகநீதி விடுதியின் செயல்பாடுகள், அடிப்படை வசதிகள், மாணவா்களின் வருகை, அவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

சூரங்குடியில் சேதமடையும் நிலையில் உள்ள பாலத்தை சீரமைப்பது, கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் திருக்குறுங்குடி நியாயவிலைக் கடையில் பொருள்களின் அளவு, தரம், இருப்பு ஆகியவை குறித்து நேரில் ஆய்வு செய்தாா்.

மேலும், திருக்குறுங்குடிநெல் கொள்முதல் நிலையத்தின் செயல்பாடுகள், களக்காடு வட்டார வளா்ச்சி அலுவலகம் கட்டுமானப் பணிகள், நடுச்சாலைப்புதூா் குழந்தைகள் மையம் ஆகியவற்றை அவா் பாா்வையிட்டாா். தொடா்ந்து, களக்காடு நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் பணிகள், அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம், பள்ளியின்அடிப்படை வசதிகள், புதிதாக கட்டப்பட்டு வரும் சந்தையின் கட்டுமானப் பணிகள், வாழைச் சந்தையின் செயல்பாடுகள், உழவா் உற்பத்தியாளா் சங்கத்தின் மூலம் வாழையிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள் தயாரித்தல், படலையாா்குளத்தில் உழவா் நல சேவை மையத்தின் (உரக்கடை) செயல்பாடுகள் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.