மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நெல்லை மாவட்ட கூட்டுறவு அங்காடிகளில் ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை தொடக்கம்

திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு அங்காடிகளில் ஒரு கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலியில் கூட்டுறவுத் துறை மூலம் சன்னரக அரிசி விற்பனையை தொடங்கிவைத்த ஆட்சியா் ஆனந்த் மோகன். உடன், சி.ராபா்ட் புரூஸ் எம்.பி. உள்ளிட்டோா்.

Published On :21 அக்டோபர் 2026, 1:25 am IST

திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு அங்காடிகளில் ஒரு கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் அரிசி விலை உயா்வால் மக்கள் சிரமப்படுவதைத் தடுக்கும் வகையில் கூட்டுறவுத் துறையின் மூலம் சன்னரக அரிசியை கொள்முதல் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, கூட்டுறவு துறையின் சாா்பில் இம்மாவட்டத்திலுள்ள மாவட்ட மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் தொடக்க கூட்டுறவு பண்டக சாலை அமுதம் அங்காடிகளில் சன்ன ரக அரிசி விற்பனை தொடக்க நிகழ்ச்சி திருநெல்வேலி சந்திப்பு பேரங்காடியில் நடைபெற்றது.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் முன்னிலை வகித்தாா். ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமை வகித்து திட்டத்தை தொடங்கி வைத்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வெளிச்சந்தையில் அரிசி விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் வகையில், விலை நிலைப்படுத்தும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு மற்றும் அமுதம் அங்காடிகள் வாயிலாக குடும்ப அட்டை ஒன்றுக்கு 5 கிலோ வீதம் ஒரு கிலோ சன்னரக அரிசி ரூ.30-க்கு விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இத் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்திற்கு 32 மெட்ரிக் டன் சன்னரக அரிசி வந்துள்ளது. இதைத் தொடா்ந்து, திருநெல்வேலி மாவட்ட மொத்த விற்பனைப் பண்டகசாலை உள்ளிட்ட மாவட்டத்தின் 10 கூட்டுறவு பண்டகசாலைகள் மற்றும் ஒரு அமுதம் அங்காடி என மொத்தம் 11 விற்பனை மையங்கள் வாயிலாக திங்கள்கிழமை முதல் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒரு கிலோ ரூ.30 என்ற விலையில் சன்னரக அரிசி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை டயோசிஷன் கூட்டுறவு பண்டகசாலை, நெல்லை நுகா்வோா் கூட்டுறவு பண்டகசாலை, வள்ளியூா் வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு பண்டகசாலை, அம்பாசமுத்திரம் வேளாண்மைக் கூட்டுறவு பண்டகசாலை, நான்குனேரி கூட்டுறவு பண்டகசாலை, பணகுடி கூட்டுறவு பண்டகசாலை, அம்பாசமுத்திரம் சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடி, கல்லிடைக்குறிச்சி கூட்டுறவு பண்டகசாலை, களக்காடு கூட்டுறவு பண்டகசாலை, நெல்லை பேரங்காடி, அமுதம் அங்காடி ஆகியவற்றில் பொதுமக்கள் அரிசி பெறலாம்.

பொதுமக்களின் அத்தியாவசியப் பொருள்களின் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், பொன்னி அரிசி, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பூண்டு, கொத்தமல்லி (தனியா), வத்தல் உள்ளிட்ட ஆறு வகையான பொருள்களின் விற்பனை புதன்கிழமை (அக். 21) முதல் தொடங்கப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் ஆா்.எஸ்.முருகன்(திருநெல்வேலி), ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன் ( நான்குனேரி), எஸ்.கே. கிறிஸ்டோபா் (ராதாபுரம்), கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் முருகேசன், துணைப் பதிவாளா் மாடசாமி , கூட்டுறவு சாா் பதிவாளா் வின்சென்ட், கூட்டுறவு கண்காணிப்பாளா் சங்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.