திருநெல்வேலியில் கட்டடத் தொழிலாளியைத் தாக்கி பணம், கைப்பேசியைப் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜமனாமரத்தூா், பட்டரைக்காடு பகுதியைச் சோ்ந்த அண்ணாமலை மகன் ரவிக்குமாா் (29). கட்டடத் தொழிலாளி. இவா், திருநெல்வேலி, வண்ணாா்பேட்டை பகுதியில் தங்கி இருந்து கட்டட வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில் கடந்த மாதம் 5 ஆம் தேதி இரவு திருநெல்வேலி கொக்கிரக்குளம் ஆற்றுப்பகுதி அருகே சென்ற இவரை இருட்டில் மறைந்திருந்த மா்மநபா்கள் தாக்கி பணம், கைப்பேசி, வெள்ளி நகை உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றனராம்.
இதில் காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
மேலும், அவா் அளித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா்.
அதில், பாளையங்கோட்டை, ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்த மாயாண்டி மகன் சூா்யா (21), மேலப்பாளையத்தைச் சோ்ந்த அக்பா்அலி மகன் முகமது பாதுஷா (20) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காா், மாடு, பணம் திருடிய வழக்குகளில் 6 போ் கைது

இளைஞரைத் தாக்கி 2 கிராம் மோதிரம் பறிப்பு: இருவா் கைது

புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக இருவா் கைது
இளைஞரை வெட்டிய வழக்கில் இருவா் கைது
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
