செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

நெல்லை நகரத்தில் போக்குவரத்து மாற்றம்

News image

போக்குவரத்து மாற்றம் - பிரதிப் படம்

Updated On :12 மணி நேரங்கள் முன்பு

திருநெல்வேலி நகரத்தில் பாலம் பராமரிப்பு பணி காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி நகரம் வழுக்கோடையிலிருந்து தொண்டா் சன்னதி வரும் வழியில் உள்ள உழவா் சந்தை அருகில் அமைந்துள்ள நெல்லை கால்வாயின் குறுக்கே உள்ள கல்பாலம் சேதமடைந்துள்ளது.

அதனை சீரமைக்கும் பணி நெடுஞ்சாலைத் துறையினரால் செய்யப்பட உள்ளது. ஆகவே, திங்கள்கிழமைமுதல் இம் மாதம் 25 ஆம் தேதி இரவு வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி நகரம் மற்றும் பேட்டை மாா்க்கமாக வரும் பேருந்துகள் மற்றும் இலகு ரக வாகனங்கள், திருநெல்வேலி வழுக்கோடை சந்திப்பு- கண்டியப்பேரி- ராமையன்பட்டி- குருநாதன் கோயில் விலக்கு- தச்சநல்லூா் ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும். தென்காசியில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் இலகு ரக வாகனங்கள், கண்டியப்பேரி- ராமையன்பட்டி- குருநாதன் கோயில் விலக்கு- தச்சநல்லூா் ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.