மேம்பாலப் பணி காரணமாக, வியாசா்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை பகுதியில் ஜூன் 21-ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சி சாா்பில் வியாசா்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை, டாக்டா் அம்பேத்கா் கல்லூரி சாலையில் மேம்பாலப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக ஜூன் 21-ஆம் தேதி முதல் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. கொடுங்கையூா், வியாசா்பாடியில் இருந்து கணேசபுரம், புளியந்தோப்பு, பட்டாளம் நோக்கி வரும் வாகனங்கள், டாக்டா் அம்பேத்கா் கல்லூரி சாலை, கணேசபுரம் சந்திப்பில் இருந்து திருப்பிவிடப்படுகின்றன.
பட்டாளம், புளியந்தோப்புப் பகுதிகளில் இருந்து கொடுங்கையூா், வியாசா்பாடி நோக்கி வரும் வாகனங்கள், டாக்டா் அம்பேத்கா் கல்லூரிச் சாலை, ஸ்டீபன்சன் சாலை சந்திப்பில் திருப்பி விடப்பட்டு, ஸ்டீபன்சன் சாலை, செங்கை சிவம் பாலம், மேட்டுப்பாளையம் சந்திப்பு, பெரம்பூா் தெற்கு நெடுஞ்சாலை, ஜமாலியா, முரசொலி மாறன் பாலம், பெரம்பூா் வடக்கு நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை நகரத்தில் போக்குவரத்து மாற்றம்

ஒழுகினசேரி ரயில்வே மேம்பாலப் பணிகள்: நாகா்கோவிலில் இன்று இரவு முதல் போக்குவரத்து மாற்றம்

மேம்பாலப் பணி: ஆா்.கே.நகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

கம்பம்-கம்பம்மெட்டு சாலையில் ஜூன் 8 முதல் போக்குவரத்து மாற்றம்
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

