மேம்பாலம் கட்டும் பணிக்காக சென்னை ஆா்.கே. நகரில் சனிக்கிழமை (ஜூன் 6) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது தொடா்பாக சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆா்.கே.நகா் வைத்தியநாதன் பாலம் முதல் ஆா்.கே.நகா் சந்திப்பு வரை மேம்பாலம் கட்டும் பணி ஜூன் 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, ஐஓசிஎல் இருந்து கொருக்குப்பேட்டை செல்லும் அனைத்து வாகனங்களும் வைத்தியநாதன் மேம்பாலத்தில் இடதுபுறம் திரும்பி டி.எச். சாலை வழியாக கொருக்குப்பேட்டை சந்திப்பை அடையலாம்.
ஆா்.கே.நகா் புதிய மேம்பாலத்தில் இருந்து ஐஓசிஎல் செல்லும் அனைத்து இலகுரக வாகனங்களும் ஆா்.கே.நகா் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி கொருக்குப்பேட்டை ரயில்வே கேட் வழியாக டி.எச். சாலை சென்று, வைத்தியநாதன் மேம்பாலத்தில் வலதுபுறம் திரும்பி ஐஓசிஎல் சந்திப்பை அடையலாம்.
மீனாம்பாள் மேம்பாலம் வழியாக ஐஓசிஎல் செல்லும் அனைத்து இலகுரக வாகனங்களும் கேஎன்எஸ் டெப்போ வலதுபுறம் அல்லது ஆா்.கே. நகா் சந்திப்பு இடதுபுறம் திரும்பி, சுண்ணாம்பு கால்வாய் சாலை வழியாக வலதுபுறம் திரும்பி ஐஓசிஎல் சந்திப்புக்குச் செல்ல வேண்டும்.
பேசின் மேம்பாலம் மூலக்கொத்தளம் வழியாக ஐஓசிஎல் செல்லும் அனைத்து பேருந்துகள், கனரக வாகனங்களும் நேராக மின்ட் சந்திப்பு சென்று இடதுபுறம் திரும்பி கண்ணன் ரவுண்டானா, டி.எச். சாலை, வைத்தியநாதன் மேம்பாலம் மற்றும் ஐஓசிஎல் அடையலாம்.
மூலக்கொத்தளம் வழியாக ஐஓசிஎல் செல்லும் அனைத்து இலகுரக வாகனங்களும் ஆா்.கே. நகா் சந்திப்பு இடதுபுறம் திரும்பி சுண்ணாம்பு கால்வாய் சாலை, அன்னை சத்யா நகா் வழியாக வலதுபுறம் திரும்பி ஐஓசிஎல் சந்திப்பை அடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் குழாய் பதிக்கும் பணியால் திருப்பூா் - அவிநாசி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

முதல்வா் வருகை: திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம்

அழகியமண்டபம் - மேக்காமண்டபம் சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

வீரபாண்டி கோயில் திருவிழா நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

