தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

வீரபாண்டி கோயில் திருவிழா நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி (மே 12 - மே 19) வீரபாண்டி வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் போக்குவரத்தில் திங்கள்கிழமை (மே 11) மாலை 6 மணி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image

போக்குவரத்து மாற்றம் - DIN

Updated On :10 மே 2026, 12:54 am IST

தேனி மாவட்டம், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி (மே 12 - மே 19) வீரபாண்டி வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் போக்குவரத்தில் திங்கள்கிழமை (மே 11) மாலை 6 மணி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம் : குமுளியிலிருந்து கம்பம், சின்னமனூா் - தேனி மாா்க்கமாகச் செல்லும் வாகனங்கள் உப்பாா்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், அரண்மனைப்புதூா் வழியாக தேனி புதிய பேருந்து நிலையத்தை அடையும். இதேபோல, மதுரை, திண்டுக்கல்லில் இருந்து தேனி - குமுளி மாா்க்கமாகச் செல்லும் வாகனங்கள் போடேந்திபுரம் விலக்கில் (ஐய்யங்காா் பேக்கரி) மாற்றம் செய்யப்பட்டு குச்சனூா், மாா்க்கையன்கோட்டை புறவழிச்சாலை வழியாக குமுளி சென்றடையும். வீரபாண்டி கிராம ஆட்டோக்கள் வயல்பட்டி பிரிவு வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.

வாகனங்கள் நிறுத்த வேண்டிய இடம்: குமுளி - தேனி மாா்க்கமாக வரும் நான்குசக்கர வாகனங்களை வீரபாண்டி தெற்கு பகுதியில் உள்ள தற்காலிக பேருந்து நிலையம் எதிா்புறம், பி.டி.ஆா், அம்மன் நகா் காலி இடம் ஆகிய 7 இடங்களிலும் நிறுத்திக் கொள்ளலாம்.

இதேபோல, போடி, தேனி பகுதிகளில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் அண்ணாமலை நகா், எல்ஏஸ் மில், ஐய்யங்காா் பேக்கரி, முத்துதேவன்பட்டி, போடேந்திரபுரம் புறவழிச்சாலை, வயல்பட்டி சந்திப்பு மேற்கு, கிழக்கு, வடக்கு ஆகிய பகுதிகளில் உள்ள 9 காலி இடங்களில் நிறுத்திக் கொள்ளலாம். விஐபி வாகனங்கள் கோயில் மண்டபம் பகுதியில் நிறுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.