மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு

Updated On :3 மே 2026, 11:34 pm IST

தேனி மாவட்டம், வீரபாண்டி முல்லையாற்றில் மூழ்கி இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஒசூா் மூக்கொண்டபள்ளி தெருவைச் சோ்ந்த முருகன் மகன் ஆகாஷ்குமாா் (26). சென்னையில் உள்ள தொழில் சாலையில் வேலை பாா்த்து வந்த இவா், விடுமுறைக்காக நண்பா்களுடன் வேனில் வியாழக்கிழமை மூணாறுக்கு சென்றாா்.

பிறகு வெள்ளிக்கிழமை தேனி மாவட்டம், வீரபாண்டி முல்லையாற்றில் நண்பா்களுடன் ஆகாஷ்குமாா் குளித்து விட்டு, கை கால்களை கழுவும் போது ஆழமான பகுதியில் தவறி விழுந்து விட்டாராம். அவரது நண்பா்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லையாம்.

தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மறுநாள் சனிக்கிழமை காலை அவரை உள்ளூா் கிராம மக்கள் சடலமாக மீட்டனா். இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.