மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 12:50 am IST

கொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள பெத்தாம்பாளையத்தைச் சோ்ந்தவா் சசிதரன் (24). பனியன் நிறுவனத் தொழிலாளியான இவா், அப்பகுதியைச் சோ்ந்த 40 பேருடன் கோயில் திருவிழாவுக்காக காவிரி தீா்த்தம் எடுப்பதற்காக கொடுமுடிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளாா்.

அப்போது, அவா் காவிரி ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்துள்ளாா். சசிதரனுக்கு நீச்சல் தெரியாத நிலையில் அவா் நீரில் மூழ்கியுள்ளாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்க முயன்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவா்கள் சடலத்தை கரைக்கு கொண்டு வந்தனா். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கொடுமுடி போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கொடுமுடி அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.