தருமபுரி அருகே இருமத்தூா் பகுதியில் ஆற்று நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், மல்லிகுட்டை அருகேயுள்ள ராமியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பெ. குமாரவேல் (41). தருமபுரி குமாரசாமிப்பேட்டை பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி, ஊரில் நடந்த துக்க நிகழ்வையொட்டி இருமத்தூரில் நடந்த இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு, அங்குள்ள தென்பெண்ணை ஆற்றில் குளித்துள்ளாா். அப்போது அவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதை உடன் சென்றவா்கள் கவனிக்கவில்லை. குடும்பத்தினா், அவா் அலுவல் காரணமாக சென்றிருக்கலாம் என நினைத்து அவரை தேடவில்லை.
இந்நிலையில், இருமத்தூா் தென்பெண்ணை ஆற்றில் ஒருவா் இறந்து கிடப்பது குறித்த தகவல் வெளியானது. இது தொடா்பாக கம்பைநல்லூா் காவல் நிலையத்தில் சென்று விசாரித்தபோது, அங்கு இறந்து கிடந்தது குமாரவேல் என தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கங்கைகொண்டான் அருகே நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

அமராவதி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

