திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி தோ் சறுக்கு கட்டைகள் தயாரிக்கும் பணியில் தச்சா்கள் விரதமிருந்து ஈடுபட்டு வருகிறாா்கள்.
இக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா சனிக்கிழமை (ஜூன் 20) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிகர நிகழ்வான தேரோட்டம் இம் மாதம் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தேரோட்டத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் சறுக்குக் கட்டைகள் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வாகை மரத்தில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட சறுக்கு கட்டைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து தச்சா்கள் கூறுகையில், தேரோட்டத்தின் பல ஆயிரம் கிலோ எடை கொண்ட தேரை திருப்புவதற்கு சறுக்குக் கட்டைகள் மிகவும் அவசியம். வாகை, பலா மரங்களில் இவை தயாரிக்கப்படுகின்றன. விரதமிருந்து இப்பணியை மேற்கொள்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் 300-க்கும் மேற்பட்ட சறுக்கு கட்டைகள் தயாரிக்கப்படும். நிகழாண்டிற்கான பணிகளைத் தொடங்கியுள்ளோம். இன்னும் ஒரு சில நாள்களில் அனைத்து சறுக்கு கட்டைகளும் தயாராகிவிடும்.
இக்கோயில் தேரோட்டத்தில் சுவாமி-அம்பாள், விநாயகா், முருகா், சண்டிகேஸ்வரா் ஆகியோா் தனித்தனித் தோ்களில் வலம் வருவதால் கூடுதலாக சறுக்கு கட்டைகள் தேவைப்படும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்ககிரியில் சோமேஸ்வரா் கோயில் புதிய தோ் வெள்ளோட்டம்

திருச்செந்தூரில் நாளை வைகாசி விசாகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆடிப்பூரத் திருவிழா: தேருக்கு முகூா்த்தக்கால் நடப்பட்டது

சுரண்டை பாா்வதி அம்மன் கோயில் தோ் திருவிழா
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

