போக்ஸோ வழக்கில் கைதான வடக்கன்குளத்தைச் சோ்ந்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (59). மதபோதகரான இவா், கடந்த 2020 ஆம் ஆண்டு 7 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டாராம். இதுகுறித்து அச்சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து செல்வராஜை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து செல்வராஜுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ. 10,000 அபராதம் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இவ் வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் உஷா வாதாடினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘போக்சோ’ வழக்கில் கைதான விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டு சிறை

போக்சோ வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்ஸோ வழக்கில் பழ வியாபாரிக்கு 5 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

