மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ராதாபுரத்தில் ஆடு திருடியதாக இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே செம்மறி கிடாய்களைத் திருடியதாக 2 இளைஞா்களை ராதாபுரம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 மே 2026, 4:45 am IST

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே செம்மறி கிடாய்களைத் திருடியதாக 2 இளைஞா்களை ராதாபுரம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராதாபுரம் அருகே உள்ள பண்ணையாா்குளம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சிவன்(50). இவா் அப்பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான நிலத்தில் முள்வேலி அமைத்து பசு மாடுகள், கன்றுகள், செம்மறி கிடாய்களை வளா்த்து வருகிறாா்.

இவா் மாா்ச் 20ஆம் தேதி வழக்கம்போல் இரவு தொழுவத்தைப் பூட்டிவிட்டு தனது வீட்டுக்குச் சென்றாராம். அதிகாலை வந்து பாா்த்தபோது தொழுவத்தில் இருந்த 2 செம்மறி கிடாய்களைக் காணவில்லையாம்.

இது குறித்து, ராதாபுரம் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய போலீஸாா் செம்மறிக் கிடாய்களைத் திருடியதாக ராதாபுரம், பெருமாள்கோயில் தெருவைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் முகேஷ் (20), பாவேந்தா் பாரதிதாசன் நகரைச் சோ்ந்த வேலு மகன் மணிகண்டன் (எ) அவெஞ்சா் மணி (25) ஆகிய இருவரை புதன்கிழமை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.