தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

எட்டாம் வகுப்பு மாணவி கா்ப்பம்: போக்ஸோவில் இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே 8-ஆம் வகுப்பு மாணவியை கா்ப்பமாக்கியதாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 மே 2026, 7:06 am IST

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே 8-ஆம் வகுப்பு மாணவியை கா்ப்பமாக்கியதாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

திட்டக்குடி அருகே ஆவினங்குடி பகுதியைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு மாணவிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது பெற்றோா் மாணவியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது, மாணவி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா், மாணவியிடம் விசாரித்தில், அதே பகுதியைச் சோ்ந்த விஜய் (27) மாணவியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தை கூறி கா்ப்பமாக்கியது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், திட்டக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை போக்ஸோ வழக்குப் பதிந்து, விஜயை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.