ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

போக்ஸோவில் ஆட்டோ ஓட்டுநா் கைது

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :7 மே 2026, 6:07 am IST

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நான்குனேரி வட்டம், மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள காரியாண்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் வெள்ளத்துரை (27). ஆட்டோ ஓட்டுநரான இவா், அப்பகுதியில் உள்ள 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இது தொடா்பாக சிறுமியின் தரப்பில் நான்குனேரி அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், போலீஸாா் விசாரணை நடத்தியதில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் வெள்ளத்துரை ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.