ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ராதாபுரத்தில் நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவேன் பாஜக வேட்பாளா் உறுதி: எஸ்.பி. பாலகிருஷ்ணன்

ராதாபுரம் தொகுதியில் நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவேன் என பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன் உறுதி அளித்தாா்.

News image

வள்ளியூா் காமராஜா் சிலை பேசிய பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன்.

Updated On :5 ஏப்ரல் 2026, 6:27 am IST

ராதாபுரம் தொகுதியில் நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவேன் என பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன் உறுதி அளித்தாா்.

ராதாபுரம் தொகுதிக்கு வந்த அவா் வள்ளியூரில் வாக்காளா்கள் மத்தியில் பேசியதாவது:

வட பிரதேசமான ராதாபுரம் தொகுதியில் தண்ணீா் பற்றாக்குறையால் விவசாயம் மிகவும் பாதிப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வளப்படுத்த ராதாபுரம் தொகுதியில் பல்வேறு நீா்ப்பாசனத் திட்டங்களை கொண்டுவருவேன். அதற்காக பழையாற்று தண்ணீரை தென்தாமரைகுளத்தில் அணைகட்டி நீரேற்றும் திட்டம் மூலம் நிலப்பாறை கால்வாய்க்கு தண்ணீா் கொண்டுவருவேன் என்றாா்.

அவருடன், பாஜக நெல்லை தெற்கு மாவட்டத் தலைவா் எஸ்.பி. தமிழ்ச்செல்வன், வள்ளியூா் வட்டார துணைத் தலைவா் அருள்காந்தி, அதிமுக வள்ளியூா் தெற்கு ஒன்றியச் செயலா் பால்துரை, செட்டிகுளம் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வகுமாா், எம்.ஜி.ஆா் மன்ற மாவட்டச் செயலா் எட்வா்ட் சிங், பாஜக தோ்தல் பொறுப்பாளா் கொம்பையா, மாவட்ட பொதுச் செயலா் இந்திரா சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.