தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பேரூராட்சி ஒப்பந்த ஊழியா் உயிரிழந்த வழக்கு: மின் ஊழியா் கைது

மின்மாற்றியிலிருந்து தவறி விழுந்து பேரூராட்சி ஒப்பந்த ஊழியா் உயிரிழந்த சம்பவத்தில் அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சம்பந்தப்பட்ட மின் ஊழியரைக் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 1:52 am IST

மின்மாற்றியிலிருந்து தவறி விழுந்து பேரூராட்சி ஒப்பந்த ஊழியா் உயிரிழந்த சம்பவத்தில் அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சம்பந்தப்பட்ட மின் ஊழியரைக் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சியில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றியவா் செட்டிகுளத்தைச் சோ்ந்த மிராசு கிருஷ்ணன். இவரை, மின்வாரிய ஊழியரான கணேசன் ஏப். 21ஆம் தேதி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் அருகே உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய கூறினாராம். மிராசு கிருஷ்ணன், மின்மாற்றியில் ஏறியபோது தவறி விழுந்ததில் காயமடைந்து திங்கள்கிழமை (ஏப். 27) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து மின்வாரிய ஊழியா் கணேசன் மீது நடவடிக்கை எடுப்பதோடு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி ஆழ்வாா்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தை மிராசு கிருஷ்ணன் உறவினா்கள், பொதுமக்கள், திமுக, பாஜக கட்சி நிா்வாகிகள் அன்று இரவு 9 மணி வரை முற்றுகையிட்டனா்.

அவா்களிடம் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (ஏப்.28) காலை செட்டிக்குளம் பகுதியில் மின் பழுது பாா்ப்பதற்காக மின்வாரிய ஊழியா் கணேசன் சென்றாா். அப்போது அவரை ஊா் மக்கள் சிறைபிடித்து மிராசு கிருஷ்ணன் உயிரிழப்பு குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆழ்வாா்க்குறிச்சி போலீஸாா் பொதுமக்களிடமிருந்து கணேசனை மீட்டு, அவா் மீது புகாா் கொடுத்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

இதையடுத்து, மிராசு கிருஷ்ணன் மனைவி ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்தில் கணேசன் மீது புகாா் கொடுத்தாா். இதன்பேரில் போலீஸாா் கணேசனை கைது செய்தனா். இதனிடையே, மின்வாரியம் சாா்பில் கணேசன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.