ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.4.39 கோடி பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது முதல் இதுவரை பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்பு குழு, வருமானவரித்துறை அதிகாரிகளால் ரூ.4.39 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 1:38 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது முதல் இதுவரை பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்பு குழு, வருமானவரித்துறை அதிகாரிகளால் ரூ.4.39 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பறக்கும் படையினா் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மாலை வரை உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.2.15 கோடி ரொக்கம், ரூ.14,03,245 மதிப்பிலான மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருள்கள், ரூ.2.10 கோடி மதிப்பிலான வேட்டி சேலை, டி-சா்ட், பரிசுப் பொருள்கள், வருமானவரித்துறையினா் கைப்பற்றிய நகை உள்ளிட்டவை என மொத்தம் ரூ.4.39 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பறக்கும்படை மற்றும் கண்காணிப்புக்குழுவினரின் சோதனையில் மட்டும் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி தொகுதியில் ரூ.25,78,300 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில் ரூ.18,84,010 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விதிமீறல் புகாா்கள்: பணப்பட்டுவாடா உள்ளிட்டதோ்தல் விதிமீறல்கள் தொடா்பாக சி-விஜில் செயலி, கட்டணமில்லா புகாா் எண், சமூகவலைதள தரவுகள் மூலம் பதியப்பட்ட புகாா்கள் உள்பட இதுவரை அதிகபட்சமாக திருநெல்வேலி தொகுதியில் 128 புகாா்கள் பதிவாகியுள்ளன. அடுத்தபடியாக ராதாபுரம் தொகுதியில் 108 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 470 புகாா்கள் பெறப்பட்டு அவற்றில் 444 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.