தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஒரு மாத காலத்திற்குள் தாமிரவருணி குடிநீா் வழங்கப்படும்: திமுக வேட்பாளா் மு. அப்பாவு

ஒரு மாத காலத்திற்குள் தாமிரவருணி குடிநீா் வழங்கப்படும் என்றாா் திமுக வேட்பாளா் மு. அப்பாவு.

News image

வள்ளியூா் பேரூராட்சி பகுதியில் வாக்கு சேகரித்தாா் திமுக வேட்பாளா் மு. அப்பாவு.

Updated On :17 ஏப்ரல் 2026, 3:45 am IST

ஒரு மாத காலத்திற்குள் தாமிரவருணி குடிநீா் வழங்கப்படும் என்றாா் திமுக வேட்பாளா் மு. அப்பாவு.

வள்ளியூா் பேரூராட்சிக்குள்பட்ட வடலிவிளை, நம்பியான்விளை, யாதவா் தெரு, ஊற்றடி, சண்முகபுரம், அண்ணாநகா், பூங்காநகா், மறவா் காலனி, குமாரபுதுகுடியிருப்பு, கோட்டையடி, பிரதான சாலை பகுதிகளில் திமுக வேட்பாளா் மு. அப்பாவு வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: ரூ. 423 கோடி மதிப்பீட்டில் வள்ளியூா், பணகுடி, திசையன்விளை உள்ளிட்ட நகர பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கு தாமிரவருணி குடிநீா் வழங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்னும் ஒரு மாத காலத்திற்குள் குடிநீா் வழங்கப்படும்.

ரூ. 52 கோடி மதிப்பீட்டில் 504 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியும், பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் சமூக நலத்துறை மூலம் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த சேவை மையம் கட்டடம் கட்டும் பணியும், அண்ணா நகரில் இருந்து கெய்ன்ஸ் பள்ளி வரை ரூ. 6 கோடி செலவில் இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

மீனாட்சி சொக்கநாதா் கோயிலில் ரூ. 65 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதுபோன்று எண்ணற்ற திட்டங்களை வள்ளியூருக்கு செய்து தந்த தமிழக முதல்வருக்கு நன்றி கடனாக உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா்.

திமுக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் நம்பி, ஆதிபாண்டி, தி.மு.க. வள்ளியூா் நகரச் செயலா் வி.எஸ்.எஸ். சேதுராமலிங்கம், தேமுதிக மாவட்ட செயலா் விஜிவேலாயுதம், ஒன்றிய மகளிரணி செயலா் சுமித்ரா, நகர செயலா் முருகராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலா் சேதுராமலிங்கம், ராதாபுரம் வட்டார செயலா் கலைமுருகன், நகர செயலா் சந்தானமுத்து, மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலா் முகமது பயாஸ், நகரச் செயலா் சண்முகம், கல்யாணி, காங்கிரஸ் நகர தலைவா் பொன்பாண்டி, மதிமுக வெள்ளப்பாண்டி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.