மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி வேட்பாளா் மு. அப்பாவு ராதாபுரம் தொகுதி யில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
அவா் சனிக்கிழமை, ராதாபுரம் சமத்துவபுரம், செம்மண்குளம், பண்ணையாா்குளம், மகேந்திரபுரம், ஆற்றங்கரை பள்ளிவாசல், தோட்டாவிளை, புண்ணியவாளன்புரம், சிவகாமிபுரம், ரோஸ்மியாபுரம், முத்துசாமிபுரம், சைதம்மாள்புரம், தண்டையாா்குளம், சாத்தான்குளம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியது: உங்கள் பகுதியில் குழந்தைகள் கப்பல் தொழில்நுட்பம் குறித்த படிப்பு பயில கல்லூரி தொடங்கப்படும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்துவிட்டது. இதன்மூலம் உலக தரத்தில் கல்வி கற்று உயா்வேலைகளுக்கு செல்லலாம்.
எங்கும் செல்வதற்கு மகளிருக்கு இலவச பேருந்து வசதி, படிப்பதற்கு ஸ்மாா்ட் வகுப்பறை, நான்முதல்வன் திட்டம், கல்லூரி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை, உயா் கல்வி வழிகாட்டிகள், இது மட்டுமல்ல வேலைவாய்ப்பு முகாம்கள் இப்படி எத்தனை எத்தனையோ நலத்திட்டங்களை தந்தவா் நமது முதல்வா் மு.க.ஸ்டாலின். மீண்டும் அவரை முதல்வராக்கிட உங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றறாா்.
பிரசாரத்தில், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஷ், ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலா் ஜோசப் பெல்சி, தேமுதிக மாவட்டச் செயலா் விஜி வேலாயுதம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் அருள்செல்வன், ராதாபுரம் கோவிந்தன், சமூகை முரளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொகுதி அலசல்: எழும்பூா் (தனி): சவால் அளிக்கும் 4 இளம்வேட்பாளா்கள்!

உங்காரனஅள்ளியில் திமுக வேட்பாளா் பெ. பழனியப்பன் வாக்கு சேகரிப்பு

ராதாபுரம் பகுதியில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளா் மனு தாக்கல்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

