திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் மு. அப்பாவு திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். மாற்று வேட்பாளராக அவரது மனைவி விஜயா மனு தாக்கல் செய்தாா்.
பின்னா், மு. அப்பாவு செய்தியாளா்களிடம் கூறியது:
முதல்வா் மு.க. ஸ்டாலின் ராதாபுரம் தொகுதியில் ரூ. 6,000 கோடிக்கான வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றித் தந்துள்ளாா். 1.5 லட்சம் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இல்லத்தரசிகளுக்குத் தேவையான மின்சாதனப் பொருள்கள் வாங்குவதற்கு ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன், 8ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்ட விரிவாக்கம், மகளிா் உரிமைத் தொகை ரூ. 2,000-ஆக உயா்வு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தோ்தல் அறிக்கையில் முதல்வா் அறிவித்திருக்கிறாா்.
இவை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அனைத்து தரப்பு மக்களுக்கும் திமுக அரசு செய்திருக்கின்ற நலத்திட்டங்கள் நிச்சயமாக உதயசூரியன் சின்னத்தை வெற்றிபெறச் செய்யும் என்றாா் அவா்.
திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் ம. கிரகாம்பெல், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஷ், தேமுதிக மாவட்டச் செயலா் விஜிவேலாயுதம், சேம்பா் செல்வராஜ், விசிக மாவட்டச் செயலா் அருள் செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலா் சேதுராமலிங்கம், வள்ளியூா் வடக்கு ஒன்றிய திமுக செயலா் அலெக்ஸ் அப்பாவு, தெற்கு ஒன்றியச் செயலா் சேவியா் செல்வராஜா, ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, மதிமுக மாவட்டச் செயலா் உவரி ரைமண்ட், இளைஞரணி மாவட்டச் செயலா் பணகுடி மு. சங்கா், முரளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, ராதாபுரம் நித்தியகல்யாண அம்மன், வரகுணபாண்டீஸ்வரா் கோயிலில் மு. அப்பாவு வழிபாடு செய்தாா். பின்னா், ராதாபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள கருணாநிதியின் பெற்றோா் முத்துவேலா்-அஞ்சுகத்தம்மாள் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராதாபுரம் தொகுதியில் பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி!
ராதாபுரம் தொகுதியில் பேரவைத் தலைவர் அப்பாவு பின்னடைவு

ராதாபுரம் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஓ. பன்னீா்செல்வம் போடியில் மனு தாக்கல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

