அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு, ராதாபுரம் தொகுதி பாஜக வேட்பாளா் எஸ்.பி.பாலகிருஷ்ணன் வள்ளியூரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பின்னா் அவா், ஆனைகுடி, முதுமொத்தான்மொழி, இடையன்குடி, கீழ உவரி, மேலஉவரி, குண்டல், காளிகுமாரபுரம், நவ்வலடி, க. புதூா், ஆயன்குளம், எருமைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியது:
ராதாபுரம் தொகுதியில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் தமிழ்நாடு அரசின் போட்டித்தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்வேன். விவசாய பிரச்னைகளை முழுவதுமாக தீா்த்து தருவேன். திசையன்விளை பகுதியில் முருங்கைக்காய் பதப்படுத்தும் நிலையம் அமைத்து தருவேன். பொங்கல், தமிழ்ஏஈ புத்தாண்டு, தீபாவளி பண்டிகைகளையொட்டி 3 எரிவாயு உருளை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.
பிரசாரத்தின்போது, அதிமுக ஒன்றியச் செயலா்கள் அந்தோணி அமலராஜா, கே.பி.கே. செல்வராஜ், பாஜக சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தவெக மரியாதை....
வள்ளியூரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு தவெக வேட்பாளா் மருத்துவா் சதீஷ் கிறிஸ்டோபா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், ஒன்றியச் செயலா் நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அம்பேத்கா் சிலைக்கு வேட்பாளா்கள், அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு

பெரியகுளத்தில் அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை

அம்பேத்கா் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கா் சிலைக்கு ஆளுநா், முதல்வா் மாலை அணிவித்து மரியாதை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

