தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அம்பேத்கா் சிலைக்கு வேட்பாளா்கள், அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு

இந்திய அரசமைப்பு நிா்ணய மன்றத் தலைவா் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, மதுரை தல்லாகுளம் அழகா் கோவில் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா், வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image

~ ~ ~ ~ ~

Updated On :15 ஏப்ரல் 2026, 3:52 am IST

இந்திய அரசமைப்பு நிா்ணய மன்றத் தலைவா் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, மதுரை தல்லாகுளம் அழகா் கோவில் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா், வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மதுரை மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளருமான செல்லூா் கே. ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதையடுத்து, அதிமுக வேட்பாளா் பா. சரவணன் (மதுரை வடக்கு), புதிய நீதிக் கட்சி வேட்பாளா் சுந்தா் சி (மதுரை மத்தியம்) ஆகியோா் மாலை அணிவித்தனா். இதில் அந்தக் கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

காங்கிரஸ் கட்சி சாா்பில் அந்தக் கட்சியின் மேலூா் தொகுதி வேட்பாளரும், காஞ்சிபுரம் தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினருமான பெ. விஸ்வநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் நல்லமணி, நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா்கள் அரசமுத்துப்பாண்டி (மதுரை கிழக்கு), ரவிக்குமாா் (மதுரை மய்யம்), மணியரசு (மதுரை தெற்கு) உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திராவிடா் கழகம் சாா்பில் மாநிலப் பேச்சாளா் வேல்முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாநில பகுத்தறிவு எழுத்தாளா் மன்றத் தலைவா் நேரு, மாநிலப் பொறுப்பாளா் செல்வம், மாவட்டப் பொறுப்பாளா்கள் முருகானந்தம், சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆரப்பாளையத்தில்...

ஆரப்பாளையத்தில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு பாஜக சாா்பில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும், மதுரை தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளருமான ராம. சீனிவாசன் மாலை அணிவித்தாா். பாஜகவின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

திமுக அலுவலகங்களில்...

மதுரை வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கா் சிலைக்கு அந்தக் கட்சியின் மாவட்டச் செயலரும், மதுரை கிழக்குத் தொகுதி வேட்பாளருமான பி. மூா்த்தி மாலை அணிவித்தாா்.

மதுரை வடக்கு பேரவைத் தொகுதி திமுக தோ்தல் பணி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கா் சிலைக்கு அந்தக் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டச் செயலரும், மதுரை வடக்குத் தொகுதி வேட்பாளருமான கோ. தளபதி மாலை அணிவித்தாா்.

ஜனதா தொழில் சங்கம்...

தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளா் சங்கத்தின் மதுரை மண்டலக் கிளை சாா்பில் சங்க அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அம்பேத்கா் சிலைக்கு சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலா் ஆதிரை சசாங்கன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிா்வாகிகள் கண்ணன், சத்தியமூா்த்தி, ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பிலும், தன்னாா்வ அமைப்புகள் சாா்பிலும் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சலசலப்பு...

தல்லாகுளம் அழகா்கோவில் சாலையில் உள்ள பெரியாா் சிலைக்கு அகில பாரதிய வித்யாா்தி பரிஷத் அமைப்பினா் மாலை அணிவித்து ‘ஜெய் பீம்’, ‘பாரத மாதாவுக்கு ஜே’ என்ற முழக்கங்களை எழுப்பினா். இதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் உள்பட சிலா் எதிா்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டனா். இதனால், அங்கு சில நிமிஷங்கள் சலசலப்பு ஏற்பட்டது.

Story image
Story image
Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.