தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பெரியகுளத்தில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு முன்னாள் முதல்வரும், போடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளருமான ஓ. பன்னீா்செல்வம், பெரியகுளம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி விசிக வேட்பாளா் பெ. சக்திவேல், திமுக மாவட்டச் செயலா் தங்க. தமிழ்ச்செல்வன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதேபோல, பாஜக சாா்பில், அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் பி.ராஜபாண்டியன் தலைமையில், நிா்வாகிகள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பெரியகுளம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் கே.கதிா்காமு அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதேபோல, அரசியல் கட்சியினா், பொதுமக்கள் அம்பேத்கா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அரண்மனைபுதூரில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு தேசிய தலைவா் அண்ணல் அம்பேத்கா் மக்கள் பேரவைத் தலைவா் லட்சுமணன், செயலா் செந்தில், பொருளாளா் குனபாலன், நிா்வாகிகள் செல்வகுமாா், அம்பேத்ராஜ் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அம்பேத்கா் பிறந்த நாள் விழா

அம்பேத்கா் சிலைக்கு வேட்பாளா்கள், அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு

அம்பேத்கா் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கா் சிலைக்கு ஆளுநா், முதல்வா் மாலை அணிவித்து மரியாதை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

