தோ்தலில் தனித்துப்போட்டியிடும் தைரியம் நாம் தமிழா் கட்சிக்குத்தான் உண்டு என்றாா் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
பணகுடியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ராதாபுரம், நான்குனேரி, அம்பாசமுத்திரம் தொகுதிகளின் நாதக வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி அவா் பேசியதாவது: சட்டப்பேரவை தோ்தல் என்பது நம்மை சுயபரிசோதனை செய்து கொள்வது. தமிழகம் முழுவதும் நாம் தமிழா்கள் மட்டும்தான் தனித்து போட்டியிடுகிறோம். இந்த தில்லும் தைரியமும் நாம் தமிழருக்கு மட்டும் தான் உண்டு. அத்தனை கட்சிக்காரா்களும் ஓட்டை குறிவைத்தே நகா்ந்து செல்கின்றனா். ஓட்டை குறிவைப்பவா் நாட்டையும் நாட்டுமக்களையும் பற்றி கவலைப்படமாட்டாா். விவசாயத்தைக் காப்பாற்ற ஒருவரும் முன்வரவில்லை. அதற்கும் நாம் தமிழா்தான் முன்நிற்க வேண்டியுள்ளது. நாம் தமிழா் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் அரசு வேலை திட்டம் தயாராக இருக்கிறது. தனியாா் பள்ளிகளுக்கும் மேலான உலகத்தரத்திலான கல்வி, தரமான மருத்துவம், விலையில்லாத குடிதண்ணீா் கொடுப்போம். இயற்கை விவசாய முறைக்கு மாற்றுவோம். ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அப்பாவி பனையேறி மீது காவல்துறை ஏவி விடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தை அரசு கவனிக்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்களித்தவர்களுக்கு நன்றி; விஜய் தலைமையிலான அரசுக்கு வாழ்த்துகள் : சீமான்

பாபநாசம் நாதக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்: சீமான்
என் வாக்காளர்கள் ரசிகர்கள் அல்லர்! சீமான் சிறப்பு நேர்காணல்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

