பாபநாசம் தொகுதி நாதக வேட்பாளரை தாக்கியவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா வயிற்றில் குழந்தையை சுமக்கும் கர்ப்பிணி பெண்ணாக இருந்தபோதிலும், தம்முடைய வலிகள் யாவையும் தாங்கிக்கொண்டு, களத்தில் பாயும் புலியாக மிகத்தீவிரமாக பரப்புரை பணிகளில் ஈடுபட்டு வந்தார். தேர்தல் களத்தில் சிறிதும் சோர்வின்றி அவர் காட்டிய வேகமும், கடுமையான உழைப்பும் கண்டு பாபநாசம் தொகுதி மக்கள் செல்லும் இடமெங்கும் பேராதரவை தந்தனர்.
பெருகும் மக்கள் ஆதரவைக் கண்டு அச்சம் கொண்ட திமுகவைச் சேர்ந்த முரடர்கள், தேர்தல் நாளான நேற்று பாபநாசம் தொகுதி வேட்பாளர் என்ற அடிப்படையில் அம்மாப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகளை பார்வையிட சென்ற தங்கை அனிஸ் பாத்திமா மீது கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கடுமையாக தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக முரடர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்த தங்கையின் நிலை கண்டு மனம் மிகவும் வேதனையடைந்தது.
கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் திறனற்ற கோழைகள், வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வெற்றி பெற நினைப்பது வெட்கக்கேடானதாகும்.
ஆட்சியிலிருந்த ஐந்து ஆண்டுகாலமும் பள்ளிப் படிக்கும் சிறுமிகள் முதல் வீட்டில் தனியாக இருக்கும் பாட்டிகள் வரை பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி, பெண்களுக்கு சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியது திமுக அரசு. தற்போது 5 ஆண்டுகால ஆட்சியும் முடிந்த பிறகும், பெண்கள் மீதான தாக்குதல்களை திமுக முரடர்கள் தொடர்வது அதிகார மமதையின் உச்சமாகும்.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? தமிழக காவல்துறையை கட்டுப்படுத்துவது யார்? திமுகவா? அல்லது தேர்தல் ஆணையமா? அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியின் பெண் வேட்பாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் கூறப்போகிறது? தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து நேற்றே நாம் தமிழர் கட்சியினர் புகாரளித்தும் இதுவரை குற்றவாளிகளை காவல் துறை கைது செய்யாதது ஏன்? தேர்தல் ஆணையம் எதனை மூடி மறைக்க முயல்கிறது? யாரை காப்பாற்ற நினைக்கிறது? ஜனநாயகத்தையே குழிதோண்டி புதைக்க செய்யும் இதுபோன்ற அட்டூழியங்களை தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கைப்பார்த்தால், பாமர மக்களுக்கு ஜனநாயகம் மீது எப்படி நம்பிக்கை வரும்?
ஆகவே, தமிழ்நாட்டின் காவல்துறையையும், சட்டம் ஒழுங்கையும் தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள தேர்தல் ஆணையம், பாபநாசம் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா மீது கொடுந்தாக்குதல் நடத்திய திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து கைது செய்ய வேண்டும்.
இல்லையென்றால் நாளை பாபநாசத்தில், தங்கை அனிஸ் பாத்திமா மீதான தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சி மாபெரும் கண்டன போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Summary
Naam Tamilar coordinator Seeman has urged that an attempt to murder case be registered and those who attacked the NTK candidate for the Papanasam constituency be arrested immediately.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்களித்தவர்களுக்கு நன்றி; விஜய் தலைமையிலான அரசுக்கு வாழ்த்துகள் : சீமான்
என் வாக்காளர்கள் ரசிகர்கள் அல்லர்! சீமான் சிறப்பு நேர்காணல்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!

தனித்துப்போட்டியிடும் தைரியம் நாம் தமிழருக்குத்தான் உண்டு: சீமான்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


