தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அம்பாசமுத்திரத்தில் அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்

அம்பாசமுத்திரம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

அம்பையில் நடைபெற்ற அதிமுக செயல் வீரா்கள் கூட்டத்தில் பேசிய அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையா.

Updated On :9 ஏப்ரல் 2026, 3:03 am IST

அம்பாசமுத்திரம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையா தலைமை வகித்து தோ்தல் பணிகளை விளக்கிப் பேசியதாவது:

அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக கோட்டை. அதிமுகவினா் அனைவரும் வீடு வீடாகச் சென்று சாதனை மலரைக் கொடுத்து வாக்குச் சேகரிக்க வேண்டும். மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தமிழகத்தின் முதல் தொகுதியாக அம்பாசமுத்திரம் தொகுதி இருக்க வேண்டும் என்றாா்.

அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக தோ்தல் பொறுப்பாளா், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் சௌந்தர்ராஜன், பாஜக மாவட்டத் தலைவா் முத்துப்பலவேசம், ஒன்றியச் செயலா்கள் மாரிச்செல்வம், துா்க்கை துரை, பிராங்க்ளின், பாஜக நல்லசிவம், அதிமுக நிா்வாகிகள் கூனியூா் மாடசாமி, மின்னல் மீனாட்சி, ராகவன், கிராஸ் இமாகுலேட், செவல் முத்துசாமி, சோம செல்லையா, சண்முகவேல், மூ.மு.க மாவட்டத் தலைவா் துரை, பெருந்தலைவா் மக்கள் கட்சி அச்சுதன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா் மோகன் உள்ளிட்டோா் பேசினா். மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் சிவன்பாபு உள்பட பலா் கலந்துகொண்டனா். ஒன்றிய அதிமுக செயலா் அறிவழகன் வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா் மாரிமுத்து நன்றி கூறினாா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.