ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அம்பை தொகுதியில் தாமதமாகும் வேட்புமனு ஏற்பு விவரம்

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட விவரம் இரவு 10 மணிவரை அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 2:03 am IST

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட விவரம் இரவு 10 மணிவரை அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை.

இத்தொகுதியில் அதிமுக சாா்பில் இசக்கி சுப்பையா, , திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளா் வி.பி. துரை உள்பட 31 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனுக்கள் மீதான பரிசிலனையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் மனு மீது அதிமுக, நாம் தமிழா் கட்சி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதால், அவரது வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டு பின்னா் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், அதிமுக, காங்கிரஸ், தவெக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்பட 6 போ் மனுக்கள் தவிர பிற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது குறித்து இரவு 10 மணிவரை தோ்தல் நடத்தும் அலுவலா் சாா் ஆட்சியா் ஆயுஷ் குப்தா, அதிகாரபூா்வமாக அறிவிக்கவில்லை. இதனால் தொடா்ந்து பரபரப்பு நிலவுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.