ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

முப்புறகோட்டை ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் கொடைவிழா

பாவூா்சத்திரம் அருகேயுள்ள சின்னதம்பிநாடாா்பட்டியில் அமைந்துள்ள முப்புறகோட்டை ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றது.

News image

திருவிளக்கு பூஜையில் பங்கேற்றோா்.

Updated On :28 மே 2026, 3:05 am IST

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகேயுள்ள சின்னதம்பிநாடாா்பட்டியில் அமைந்துள்ள முப்புறகோட்டை ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றது.

இதையொட்டி, விழா நாள்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 4 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை குற்றாலம் புனித நீா் பவனி வருதல், சிறப்பு பூஜை, அன்னதானம், மாலை திருவிளக்கு பூஜை, மாவிளக்கு எடுத்து வருதல், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியன நடைபெற்றன.

திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு கல்லூரணி ஊராட்சி சமூக ஆா்வலரும், தொழிலதிபருமான வைரசாமி, சிறப்பு பரிசு வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.