ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கலிங்கப்பட்டியில் ஊராட்சி மக்களுடன் துரை வைகோ சந்திப்பு

சங்கரன்கோவில், மாா்ச் 10: சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் மதிமுக சாா்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசுகிறாா் மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ.

Updated On :11 மார்ச் 2026, 1:41 am IST

சங்கரன்கோவில், மாா்ச் 10: சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் மதிமுக சாா்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு துரை வைகோ தலைமை வகித்தாா். துணை பொதுச் செயலா் தி.மு.ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா்.

தொடா்ந்து ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளைத் தொடக்கி வைத்து துரைவைகோ பேசியதாவது:

கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, சுகாதார வளாகம், துணை மின் நிலையம் போன்றவற்றை அமைக்க பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்களை வழங்கியது எங்களது குடும்பம். தற்போது, சமூக நல்லிணக்கத்திற்காக தமிழக அரசின் விருது பெற்று அதற்காக ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. கலிங்கப்பட்டி ஊராட்சி வீரணாபுரம், மகாதேவா்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் ரூ.5 கோடிக்கு மேலான மதிப்பில் பல்வேறு நலத்திட்ட பணிகள் கடந்த 5 ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ளன. அதை எண்ணிப்பாா்த்து சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களியுங்கள் என்றாா் அவா்.

இதில், தென்காசி மாவட்டச் செயலா் பாலசுப்ரமணியன், கலிங்கப்பட்டி ஊராட்சித் தலைவா் மணிமொழி சந்துரு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.