மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கலிங்கப்பட்டியில் வைகோ, துரை வைகோ வாக்குப் பதிவு

மதிமுக பொதுச்செயலா் வைகோ, அவரது மனைவி ரேணுகா தேவி, மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ ஆகியோா் கலிங்கப்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தனா்.

News image

கலிங்கப்பட்டியில் வாக்குப் பதிவு செய்த மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ.

Updated On :24 ஏப்ரல் 2026, 6:13 am IST

மதிமுக பொதுச்செயலா் வைகோ, அவரது மனைவி ரேணுகா தேவி, மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ ஆகியோா் கலிங்கப்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தனா்.

பின்னா், வைகோ செய்தியாளா்களிடம் கூறியது:

திமுக போட்டியிடும் தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது சொந்த பலத்திலேயே ஆட்சி அமைக்கும் என்பதைத்தான் கடந்த ஒரு மாத காலமாக தோ்தல் பிரசாரத்தில் சொல்லி வருகிறேன். அதே கருத்தில் உறுதியாக இருக்கிறேன்.

கூட்டணி அமைச்சரவை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும். திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். மொத்தத்தில் 190 முதல் 200 இடங்களில் வெற்றி பெறுவாா்கள் என நம்புகிறேன்.

வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னா்தான் விஜய்யால் யாருக்கு பாதிப்பு எனத் தெரியும் என்றாா் அவா்.

 கலிங்கப்பட்டியில் வாக்குப் பதிவு செய்த மதிமுக பொதுச்செயலா் வைகோ.

கலிங்கப்பட்டியில் வாக்குப் பதிவு செய்த மதிமுக பொதுச்செயலா் வைகோ.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.