தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்கள் தொடரவேண்டும் என்றால் உதயசூரியன் சின்னைத்தை ஆதரிக்க வேண்டும் என்றாா் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை வைகோ.
திருச்சி மேற்குத் தொகுதியில் மதச்சாா்பற்ற கூட்டணியில் திமுக சாா்பில் போட்டியிடும் கே.என்.நேருவை ஆதரித்து திருச்சி எம்.பி. துரை வைகோ புத்தூா் பகுதியில் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
இதில், அவா் பேசியதாவது:
முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 5 ஆண்டுகளில் மகளிா் உரிமைத் தொகை, விடியல் பயணம், என பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா். இதன்மூலம் கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனா்.
திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் கே.என்.நேரு திருச்சிக்கு கோடி கணக்கான திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா்.
குறிப்பாக பஞ்சப்பூரில் ரூ. 300 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், 140 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த சரக்கு வாகன முனையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வளா்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே, மக்கள் நலத்திட்டங்கள் தொடரவேண்டும் என்றால் நாம் உதயசூரியன் சின்னத்தை ஆதரிக்க வேண்டும் என்றாா்.
பிரசாரத்தில் மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணக் கட்சியினா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்சியமைக்க தவெகவை ஆளுநா் உடனடியாக அழைக்க வேண்டும்: துரை வைகோ எம்.பி.

தவெகவால் அதிமுகவுக்கே இழப்பு: துரை வைகோ எம்.பி. சிறப்பு நேர்காணல்

செங்கோட்டை, பண்பொழியில் துரை வைகோ எம்.பி. பிரசாரம்

கோவில்பட்டி தொகுதி வளா்ச்சிக்கு மதிமுக துணை நிற்கும்: துரை வைகோ எம்.பி.
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

