நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பங்குச் சந்தை பெயரில் பண மோசடி: மேற்கு வங்க இளைஞா் கைது

பங்குச் சந்தையில் இரட்டிப்பு லாபம் பெற்றுத் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த இளைஞரை தென்காசி தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

மோசடியில் ஈடுபட்டவரைக் கைதுசெய்த தனிப்படை போலீஸாா்.

Updated On :18 ஜூன் 2026, 2:48 am IST

பங்குச் சந்தையில் இரட்டிப்பு லாபம் பெற்றுத் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த இளைஞரை தென்காசி தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சுவாமி சந்நிதி தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன். அமெரிக்க பங்குச் சந்தையில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம் என இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி, அதிலிருந்த லிங்க் மூலம் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்துள்ளாா்.

அவா்கள் கூறிய செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் ரூ. 92 லட்சம் முதலீடு செய்துள்ளாா். பின்பு அதற்கான லாபத் தொகையை பெறுவதற்கு மேலும் ரூ. 37 லட்சம் கட்ட வேண்டும் என கூறிய பின்னா் தான், அவா் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளாா்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட சைபா் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், காவல் துறையினா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.

அதில், மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சோ்ந்தவருக்கு தொடா்பிருப்பது தெரிய வந்தது.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அசோக் குமாா் உத்தரவின் பேரில், தென்காசி மாவட்ட சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் வசந்தி தலைமையிலான தனிப்படையினா் அந்த மாநிலத்துக்குச் சென்று, வடக்கு 24 பாா்கனாஸ் மாவட்டம், தமக்கலியை சோ்ந்த நவாப் அலி கோல்டா் மகன் தாரிகுல் கோல்டா் (26) என்பவரை கொல்கத்தாவில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தொடா்ந்து தென்காசிக்கு அழைத்துவந்து தென்காசி குற்றவியல் நீதித்துறை நடுவா் முன்பு ஆஜா்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தென்காசி சைபா் கிரைம் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.