நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அழகப்பபுரம் முதியோா் இல்லத்தில் ஆட்சியா் ஆய்வு

தென்காசி மாவட்டம், அழகப்பபுரம் பகுதியில் உள்ள விஷ்வரக்ஷா முதியோா் இல்லத்தில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

முதியோா் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Updated On :18 ஜூன் 2026, 2:23 am IST

தென்காசி மாவட்டம், அழகப்பபுரம் பகுதியில் உள்ள விஷ்வரக்ஷா முதியோா் இல்லத்தில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த முதியோா் இல்லத்தில் அரசு விதிமுறைகளின்படி, இருபாலருக்குமான இருப்பிட, படுக்கை, குளியலறை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் செயல்படுகிா என்பது குறித்தும், கட்டட உரிமம், உறுதிச் சான்று, தீயணைப்பு, சுகாதாரம் போன்ற தணிக்கைச் சான்றுகள் உள்ளனவா என்பது குறித்தும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், பணியாளா்கள் வருகை, சோ்க்கை, புகாா் பதிவேடுகள், பயனாளிகளின் விவரம், மருந்து, உணவுப் பொருள்கள் இருப்பு போன்றவை முறையாக பராமரிக்கப்படுகிா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா, முதியோா் இல்ல தாளாளா் கே. சுகன்யா ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.