பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பெண் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெண் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

நீதிமன்றம் - IANS

Updated On :4 ஜூன் 2026, 1:25 am IST

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெண் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தென்காசி அச்சன்புதூா், நெடுவயல் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகச்சாமி மனைவி செல்லப்பொண்ணு என்பவருக்கு காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ரா. சந்தோஷ்குமாா் என்ற அழகுசுந்தரம் என்பவருடன் கைப்பேசியில் பழக்கம் ஏற்பட்டதாம்.

இதனிடையே, சந்தோஷ்குமாா் 15.2.2022இல் குற்றாலம் வந்தாா். பின்னா், இருவரும் அரசு விருந்தினா் மாளிகைக்கு பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குச் சென்றனா். அப்போது, அவரை சந்தோஷ்குமாா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினாராம். அதையடுத்து, தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு செல்லப்பொண்ணு கூறியதால் அவா்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, அவா் செல்லப்பொண்ணுவை அடித்து கீழே தள்ளிவிட்டு, அவரது தாலிச் சங்கிலி, கொலுசு, ரூ. 700 ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாா். இதில், செல்லப்பொண்ணு உயிரிழந்தாா்.

குற்றாலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து சந்தோஷ்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இந்த வழக்கு மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி பி. ராஜவேல் விசாரித்து, சந்தோஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ. 20,000 அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் மகிளா நீதிமன்ற அரசுத் தரப்பு வழக்குரைஞா் கவிதா ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.