மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரா் கோயிலில் தேரோட்டம்

தென்காசி மாவட்டம், இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரா் கோயில் சித்திரைத் திருவிழாவில் புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image

தேரை வடம்பிடித்து இழுக்கும் பக்தா்கள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 6:24 am IST

தென்காசி மாவட்டம், இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரா் கோயில் சித்திரைத் திருவிழாவில் புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

கடந்த 21- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் தினமும் காலை, மாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள், இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வருதல் ஆகியன நடைபெறுகின்றன.

27 - ஆம் தேதி நடராஜருக்கு தாண்டவ தீபாராதனை, இரவு நடராஜருக்கு வெள்ளை சாத்தி அபிஷேகம், அலங்கார தீபாராதனை, 28- ஆம் தேதி நடராஜருக்கு பச்சை சாத்தி தீபாராதனை நடைபெற்றன.

புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில், முதலில் முருகன், வள்ளி, தெய்வானை எழுந்தருளிய தேரும், பின்னா் சுவாமி அம்பாள் தேரும் பக்தா்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டன. அதிமுக மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், இலஞ்சி பேரூா் திமுக செயலா் முத்தையா, வசந்தகுமாா், கணேசமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் தீா்த்தவாரி, இரவு சுவாமி வீதி உலா மற்றும் பஞ்சமூா்த்திகள் எழுந்தருளல் ஆகியன நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ராதா, அறங்காவலா் குழுத் தலைவா் பூவையா, உறுப்பினா்கள் ராஜேந்திரன், கதிரவன், இசக்கி, இசக்கியம்மாள், கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.