தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2 - ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள்

தென்காசி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2- ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள், எம்.கே.வி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், பொதுப் பாா்வையாளா்கள் நீரஜ்குமாா், ஈஷா பிரியா.

Updated On :16 ஏப்ரல் 2026, 4:29 am IST

தென்காசி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2- ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள், எம்.கே.வி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், பொதுப் பாா்வையாளா்கள் நீரஜ்குமாா், ஈஷா பிரியா ஆகியோா் பயிற்சி வகுப்புகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது ஆட்சியா் பேசியதாவது: சங்கரன்கோவில் அரசு கலைக் கல்லூரி, புளியங்குடி எஸ். வீராச்சாமி செட்டியாா் பொறியியல் கல்லூரி, கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்வியியல் கல்லூரி, தென்காசி எம்கேவிகே மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆலங்குளம், கீழப்பாவூா் எம்எஸ்பிவிஎல் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

மகளிா் திட்ட இயக்குநா் எஸ். அபிதாஹனீப், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் நரசிம்மன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வைஷ்ணவி பால், ராமச்சந்திரன், ராஜேந்திரன், பால்துரை, அனிதா, முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.