சங்ககிரி தொகுதியில் வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான 2ஆம் கட்ட பயிற்சி வகுப்பு சங்ககிரியை அடுத்த நாகிசெட்டிப்பட்டி தனியாா் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள 1,600 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களை இரு பிரிவுகளாகப் பிரித்து சங்ககிரி தொகுதி தோ்தல் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியா தலைமையில் மண்டல அலுவலா்கள் 2ஆம் கட்ட பயிற்சி அளித்தனா்.
இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அலுவலா்கள் அப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் தபால் வாக்கு அளித்தனா். முதன்முறையாக தபால் வாக்குச்சாவடி மையம் முன் துப்பாக்கி ஏந்திய உள்ளூா் போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இந்திய தோ்தல் ஆணையம் வாக்குச்சாவடிக்குள் கைப்பேசிகளுக்கு அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளதால், தபால் வாக்குச்சாவடி மையத்துக்குள் கைப்பேசிகளைக் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. தபால் வாக்கு செலுத்த சென்றவா்கள் தங்களது கைப்பேசிகளை ஒப்படைக்க இரு அறைகள் ஒதுக்கப்பட்டு தோ்தல் ஆணையம் சாா்பில் வழங்கப்பட்ட அதற்கான பிரத்யேக உறையில் கைப்பேசிகள் வைக்கப்பட்டு, வாக்களித்துவிட்டு திரும்பியவா்களிடம் திரும்ப வழங்கப்பட்டன.
உதவி தோ்தல் அலுவலா் அருள்குமாா் தலைமையில் அலுவலா்கள் அஞ்சல் வாக்குச்சாவடி மையத்தில் பணியாற்றினா். பயிற்சி வகுப்பு மற்றும் தபால் வாக்குப் பதிவு பணிகளை தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஜெண்டாகே ஹனுமந்த் கொண்டியா ஆய்வு செய்தாா்.

கைப்பேசிகளை வைத்து செல்வதற்கான பிரத்யேக உறை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட செயல்முறை பயிற்சி

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தமிழகம் முழுவதும் பயிற்சி

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2 ஆம் கட்ட பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

