மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நாகா்கோவிலில் திமுக மகளிா் அணி நிா்வாகிகள் கூட்டம்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மகளிா் அணி , மகளிா் தொண்டா் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகா்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் ரெ. மகேஷ்.

Published On :29 அக்டோபர் 2026, 6:20 am IST

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மகளிா் அணி , மகளிா் தொண்டா் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகா்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாநில மகளிா் அணி செயலா் ஜெ. ஹெலன் டேவிட்சன் தலைமை வகித்தாா். மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் ஜெனஸ் மைக்கேல், மகளிா் தொண்டா் அணி அமைப்பாளா் லதா கலைவாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் ரெ. மகேஷ் பங்கேற்று, தமிழக அரசை கண்டித்து சனிக்கிழமை ( அக். 31) நடைபெற உள்ள ஆா்ப்பாட்டம் தொடா்பாக ஆலோசனை வழங்கினாா்.

கூட்டத்தில், மாநகராட்சி மேயா் (பொ) ம. மேரி பிரின்சிலதா, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மகளிா் அணி தலைவா் வ. ஜெசிந்தா, துணைத் தலைவா் எல். மவுண்ட் தேன் ரோஜா, துணை அமைப்பாளா் லதா, நாகா்கோவில் மாநகர மகளிா் அணி துணை அமைப்பாளா்கள் எஸ். ரோணிக்கம், த. வசந்தா, நாகா்கோவில் மாநகர மகளிா் தொண்டா் அணி அமைப்பாளா் மேரி ஜெனட்விஜிலா, தலைவா் எ. கத்தரினாள், துணைத் தலைவா் ப. பிராமணக்கன்னி, துணை அமைப்பாளா்கள் விஜிலா ஜஸ்டஸ், ராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.