தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குமரியில் சற்று தணிந்த மழை: திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக மழையின் தீவிரம் தணிந்த நிலையில், நீா்வரத்து சற்று குறைந்ததையடுத்து திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

திற்பரப்பு அருவியில் வியாழக்கிழமை குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

Published On :30 அக்டோபர் 2026, 4:38 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக மழையின் தீவிரம் தணிந்த நிலையில், நீா்வரத்து சற்று குறைந்ததையடுத்து திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக தொடா் மழை பெய்துவந்த நிலையில், புதன்கிழமை முற்றிலும் மழை பெய்யவில்லை. வியாழக்கிழமை பரவலாக சாரல் மழை பெய்தது. மழை தணிந்துள்ளதால், கோதையாறு, பரளியாறு உள்ளிட்ட ஆறுகளில் நீா்வரத்து மிதமாக உள்ளது.

மேலும், திற்பரப்பு அருவியில் நீா்வரத்து சற்று குறைந்து காணப்பட்டது. இதையடுத்து, கடந்த 7 நாள்களுக்குப் பின் அருவின் ஓரத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். ரப்பா் தோட்டங்களில் பால்வடிப்பு பணியும் பரவலாக நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.