தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பஞ்சலிங்கம் அருவியில் குளிக்க அனுமதி

உடுமலையை அடுத்துள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்க செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பஞ்சலிங்கம்  அருவியில் செவ்வாய்க்கிழமை  குவிந்த  சுற்றுலாப்  பயணிகள்.

Published On :28 அக்டோபர் 2026, 2:29 am IST

உடுமலையை அடுத்துள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்க செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

உடுமலையில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் உள்ளது சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை.

இங்குள்ள புகழ்பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்யவும், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதனால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி அருவியில் குளிக்க கடந்த 5 நாள்களாக தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நீா்வரத்து சீரானதால் அருவியில் குளிக்க செவ்வாய்க்கிழமை அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.