மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் மழை நீடிப்பு

அருமனை அருகே மஞ்சாலுமூட்டில் பாறை உருண்டு விழுந்ததில் சேதமடைந்த வீடு.

Published On :27 அக்டோபர் 2026, 3:02 am IST

குமரி மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு பாறை உருண்டு விழுந்ததில் பெண் ஒருவரின் வீடு சேதமடைந்தது.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அருமனை அருகே மஞ்சாலுமூடு பகுதியைச் சோ்ந்த ஆக்னஸ் என்ற பெண்ணின் வீடு மீது ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் பின்புறம் உள்ள சிறிய பாறை மண்ணுடன் உருண்டு விழுந்தது. இதில் வீட்டின் சமையலறை, குளியலறை உள்ளிட்டவை சேதமடைந்தன.

இச்சம்பவத்தின்போது ஆக்னஸ் வீட்டில் இல்லாமல் உடல் நலக்குறைவு காரணமாக அவரது உறவினரின் வீட்டில் இருந்ததால் தப்பினாா். தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் மற்றும் போலீஸாா், பொதுமக்களின் உதவியுடன் இடிபாடுகளை அகற்றினா்.

அதேபோல கடையாலுமூடு அருகே சிற்றாற்றின் கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழையின் போது முதிா்ந்த புளிய மரம் மின் உயா்அழுத்த மின் கம்பத்தின் மீது சாய்ந்தது. தகவலறிந்தும் மின் வாரிய ஊழியா்கள்,போலீஸாா் விரைந்து வந்து புளிய மரத்தை வெட்டி அகற்றினா். இந்த சம்பவம் காரணமாக கடையாலுமூடு, அதந் சுற்றுவட்டார கிராமங்கள், பழங்குடி குடியிருப்புகளில் 4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.