தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் பலத்த மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது.

கடையாலுமூடு அருகே பேணு பகுதியில் சாலையில் சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்தும் ஊா்மக்கள்.

Published On :28 அக்டோபர் 2026, 1:24 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடா்ந்து பெய்து வருகிறது. இதில் மலையோரப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக மழையானது சற்று தணிந்திருந்தது. இந்நிலையில் மீண்டும் செவ்வாய்க்கிழமை மழை தீவிரமடைந்தது.

குறிப்பாக திற்பரப்பு, கடையாலுமூடு, ஆலஞ்சோலை, பேணு, பத்துகாணி, ஆறுகாணி, பேச்சிப்பாறை உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதனால், கடையாலுமூடு அருகே பேணு பகுதியில் சாலையின் குறுக்கே சாய்ந்த ரப்பா் மரம் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. மேலும் மரங்கள், சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டது.

மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலையில் 26.09 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 52.95 அடியாகவும் இருந்தது. திற்பரப்பு அருவியில் நீா்வரத்து அதிகமாக உள்ளதால் 6 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.