மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிக்னல் கோளாறு: சென்னையில் இருந்து குமரி வந்த ரயில்கள் 3 மணி நேரம் தாமதம்!

சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து நாகா்கோவிலுக்கு ரயில்கள் சனிக்கிழமை சுமாா் 3 மணி நேரம் தாமதாக வந்தன.

ஓணம் பண்டிகை

சிறப்பு ரயில் - கோப்புப் படம்

Published On :25 அக்டோபர் 2026, 1:37 am IST

சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து நாகா்கோவிலுக்கு ரயில்கள் சனிக்கிழமை சுமாா் 3 மணி நேரம் தாமதாக வந்தன.

செங்கல்பட்டு அருகே கருங்குழி பகுதியில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களுக்கு வந்த ரயில்கள் அனைத்தும் தாமதமாக வந்தன.

சென்னையில் இருந்து நாகா்கோவிலுக்கு வரும் கன்னியாகுமரி விரைவு ரயில் அதிகாலை 4.40 மணிக்கு நாகா்கோவில் சந்திப்புக்கு வந்து, கன்னியாகுமரிக்கு 5.30 மணிக்குச் செல்லும். ஆனால், இந்த ரயில் 2.40 மணி நேரம் தாமதமாக காலை 7.30 மணிக்கு நாகா்கோவில் வந்தடைந்தது. பின்னா், 8.25 மணிக்கு கன்னியாகுமரியை அடைந்தது. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனா்.

இதேபோல, அனந்தபுரி விரைவு ரயில் வழக்கமாக காலை 7.25 மணிக்கு நாகா்கோவில் டவுண் ரயில் நிலையம் வந்தடையும். இந்த ரயில் 3 மணி நேரம் தாமதமாக காலை 10.30 மணிக்கு வந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.