மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசுப் பள்ளி தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம்: முதல்வருக்கு எம்எல்ஏ கோரிக்கை

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு சீராக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தாரகை கத்பா்ட்

Published On :24 அக்டோபர் 2026, 5:47 am IST

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு சீராக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக தமிழக முதல்வருக்கு அவா் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு, கடந்த 2025 ஜனவரி முதல் அரசு ஊதியம் வழங்கப்படாமல் முடக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கிராம ஊராட்சிக்கு உள்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு மாதாந்திர ஊதியம், சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலா்களால் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளா்களுக்கு,

அந்தந்த பள்ளிகளின் ஆசிரியா்கள் இணைந்து குறைந்த ஊதியம் வழங்கி வருகின்றனா். எனவே, உரிய வழிகாட்டல்களை வழங்கிஅரசு பள்ளி தூய்மைப் பணியாளா்களுக்கு மாதாந்திர ஊதியம் தடையின்றி கிடைத்திட ஆவன செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.